
முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை சில நாட்களில் மொத்தமாக பெய்துவிடுகிறது. கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது என்று கூறினார்.
மேலும் வானிலை முன்னெச்சரிக்கை, மழையின் அளவு, ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து அறிய TN Alert என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.