விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திங்கள்கிழமை இரவு திடீரென சந்தித்து பேசினார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சில கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக அந்த கூட்டணியிலிருந்து விலகி விட்ட நிலையில், மற்ற கட்சிளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி சேரலாம் எனக் கருதப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி. சண்முகம் திங்கள்கிழமை இரவு தனியே சந்தித்துப் பேசினார்.
நேற்று இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு இரவு 7.50 மணி வரை நடைபெற்றது. அப்போது அதிமுக கூட்டணியில் சேர பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மகன் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி: சைதை துரைசாமி
எனினும் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!
உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்

Bunch Of Idiots! கைதான பிறகு உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



