மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொங்கல் பண்டிகை: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தேபாரத்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே  சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜனவரி 2024, 2:57 pm

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே  சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் - நாகர்கோவில் இடையே ஜன. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

Story image

மறுவழித்தடத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூா் இடையே   ஜன. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகா்கோவிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு எழும்பூா் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் நின்றுச் செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.