சென்னை: மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடும் மம்தாவின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தினமணி இணையதள செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று காலை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் முதல் நாளில் ‘தேர்தல் 2024’ என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்று உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தினமணி இணையதளப் பிரிவுக்கு அவர் அளித்த பேட்டி:
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
இந்தியாவை போன்ற பெரிய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைகள் வேறுபடும். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் கண்டிப்பாகத் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளாது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரே கூட்டணிக்குள் உள்ளன. அவைகளுக்குள் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. மாநிலங்களில் இரு கட்சிகளுக்கு இடையேயும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.
இதையும் படிக்க | தமிழ்நாடு, கேரளத்தில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்: குஷ்பு
மம்தாவின் அறிவிப்பு மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஒரு கட்சி ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட அதிமுக, தற்போது தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா கூட்டணிக்குள் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்கக்கூடிய ஒன்றே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



