உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு.
சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு.
சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு.
Published on
Updated on
1 min read

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், “உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”உத்தரகோசமங்கை கோயில் என்பது முதலில் சிவனுக்காக எழுப்பப்பட்ட திருக்கோயில் ஆகும். இக்கோயிலில் வரும் ஏப். 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 110 ஓதுவார்கள் உள்ளனர். இந்த ஓதுவார்களில் 45% பேர் இந்த ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 11 பெண் ஓதுவார்களை நியமித்தது இந்த ஆட்சிதான்.

உத்திரகோசமங்கை கோயில் உள்பட அன்று நடைபெறும் மூன்று கோயில்களிலும் அன்னைத் தமிழில் குடமுழுக்கு நடைபெறும்.

100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் இந்த குடமுழுக்கில் ஓதுவார்கள். அதில் பெண் ஓதுவார்களும் பங்கேற்பார்கள்” என்றார்.

இதையும் படிக்க: தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com