தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா!

நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீராமநவமி விழா பற்றி.

News image
ஶ்ரீராமநவமி பெருநாள் விழாவையொட்டி நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கொடியேற்றப்பட்டது.
Updated On :6 ஏப்ரல் 2025, 6:59 am

DIN

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவையொட்டி திருக்கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன், சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

திருக்கொடியேற்றத்தை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் செய்தும் நடத்தி வைத்தனர்.

கொடியேற்றத்தில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களோடு அமர்ந்த இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி.

பக்தர்களோடு அமர்ந்த இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி.

வரும் 16 ம் தேதி வரை நாள்தோறும் சுவாமி, தாயார் சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

ஶ்ரீராமநவமி பெருநாள் விழாவையொட்டி நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கொடியேற்றப்பட்டது.

ஶ்ரீராமநவமி பெருநாள் விழாவையொட்டி நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கொடியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.