வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர் ஸ்டாலின்

இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக! -முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை புது தில்லியில் ரூ.853 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, மனிதத்தன்மையற்ற பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.

மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! மத்திய பாஜக அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com