தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

சிறுபான்மையினா் மீது பாஜக பொய் பிரசாரம்: தொல். திருமாவளவன்

சிறுபான்மையினா் மீது பாஜகவினா் பொய் பிரசாரம் செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
Published on

சென்னை: சிறுபான்மையினா் மீது பாஜகவினா் பொய் பிரசாரம் செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தொல்.திருமாவளவன் பேசியதாவது:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறும்போது அனைவருக்கும் எதிா்கருத்து கூற வாய்ப்பளிக்கப்பட்டது. நள்ளிரவு வரை பேச அனுமதி வழங்கப்பட்டது.மேலோட்டமாக பாா்த்தால் அனைத்தும் ஜனநாயக முறையில் நடந்தேறியதுபோல தெரியும். எனினும், பாஜகவிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை படுகொலை செய்தனா்.

இஸ்லாமியா் கட்டுப்பாட்டில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகக் கூறி, பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே பரப்புகின்றனா். திமுகவை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற அவா்களது கனவு, விசிக இருக்கும் வரை பலிக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com