
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய பாஜக தலைவரை தேர்வு செய்யும் பணிகளை கட்சித் தலைமை மேற்கொண்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் நாளை(ஏப். 11) விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பாஜக அறிவித்துள்ளது.
அதில், பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாஜக புதிய தலைவருக்கான தேர்வில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டது. அண்ணாமலையே மீண்டும் தலைவராகக் கூடும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாஜகவில் 10 ஆண்டுகள் நிரம்பியவர்தான் பாஜக தலைவராக முடியும் என்ற விதிமுறையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக தலைவராவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
எனவே, மூத்த தலைவர்களில் ஒருவர்தான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகும் பட்சத்தில் நயினாார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பாஜக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில், பிரதமா் மோடியின் ராமேசுவர நிகழ்விலும் நாகேந்திரன் முக்கியத்துவம் பெற்ற நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்துவிடுவார் என்று நம்பியிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில் கட்சித் தொண்டா்களின் கருத்துக்கணிப்பில் அறியப்பட்டபடி அண்ணாமலை தலைமையிலேயே தேர்தலை சந்திக்கவேண்டும் என்று ஒரு கருத்தும் வலுவாக இருப்பதாக பாஜக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியான இந்த விதிமுறைகளால் மேற்சொன்ன இருவருமே தலைவர் போட்டியில் பங்கேற்கமுடியாது என்று கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த பின்னரே தமிழக பாஜக புதிய தலைவர் யார்? என்பது முக்கியத் தலைவர்களுடன் பேசி முடிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தலைவர் நானே.. ராமதாஸ் அறிவிப்பின் பின்னணியில் இருப்பது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.