
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இமயமலைக்குச் சென்றுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை, இமயமலையில் உள்ள பாபா குகையில் தியானத்தில் ஈடுபட்டுள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதேமேடையில் அண்ணாமலையின் தலைமை நிர்வாகத் திறன்களை பாராட்டி அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இமயமலைக்கு சென்றுள்ளார். அவர், நேற்று சென்னையில் இருந்து தில்லி புறப்பட்ட நிலையில், தில்லியில் இருந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பு: கர்நாடகத்தில் ஏப்.17 அமைச்சரவை கூட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.