
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சற்று குறைந்துள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 70,040-க்கும் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ. 8,755-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.