அதேபோன்று, மத்திய மோடி அரசு, தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து துரோகமிழைத்து வருகிறது. தமிழகத்திற்கு உரிய வரிப் பங்கீட்டை ஒதுக்க மறுப்பது, கல்விக்கான நிதி ஒதுக்க மறுப்பது; நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுப்பது; 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை நிலுவை வைப்பது; தேசிய கல்விக் கொள்கையைத் திணிப்பது; தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது; கல்வி, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற தமிழக விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.