மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பஹல்காம் தாக்குதல்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

நடிகர் ரஜினிகாந்த்

கோப்புப்படம்.

Updated On :25 ஏப்ரல் 2025, 4:28 pm

DIN

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

அதனைக் கெடுக்கனும் இப்படி செய்கிறார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அதன் பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

இந்த மாதிரி மறுபடி செய்யனும் என்று அவர்கள் இனி கனவில்கூட நினைக்கக்கூடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.