இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!

இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்பது குறித்து பொது அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
இருட்டுக்கடை அல்வா
இருட்டுக்கடை அல்வா
Published on
Updated on
1 min read

இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்ற விவகாரத்தில், கடையின் உரிமையாளர் என கூறப்படும் கவிதாவின் சகோதரர் நயன் சிங், சார்பில் இன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் என்பவர் இருட்டுக்கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என நாளிதழ்களில் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருட்டு கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங் மறைவுக்கு பின் அவரது மகன் பிஜிலி சிங் இருட்டு கடையை நடத்திவந்தார்.

பிஜிலி சிங் மறைவுக்குப் பின்பு அவரது மனைவி சுலோச்சனா பாய்க்கு கடையின் உரிமை சென்று சேர வேண்டும் என 1999 ஆம் ஆண்டு சட்டப்படி சாட்சிகள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார்.

பிஜிலி சிங் மனைவி சுலோச்சனா பாய் மறைவுக்கு பின் அவர்களுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் ஜெயராம் சிங்க்கு சென்று சேர வேண்டும் என உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சுலோச்சனா பாயும் உயிரிழந்த நிலையில் இருட்டுக்கடை ஸ்தாபனம் மற்றும் சொத்துகள் அனைத்தும் ஜெயராம் சிங் தரப்புக்கு அதாவது அவரது மகனுக்கு வர வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உரிமையாளரான கவிதா என்பவர் தனக்கு மட்டும் இருட்டுக்கடை சொந்தம் என கூறி வருகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால், உயிலில் குறிப்பிட்டபடி ஜெயராம் சிங் மகன் நயன் சிங்குக்கு மட்டும் இருட்டுக்கடை உரிமை பாத்தியபட்டது. இருட்டுக்கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் கடையை உரிமை கோர சண்டை செய்து வருவதாக தகவல் பரவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து இருட்டுக்கடை ஸ்தாபனம் குறித்த நடவடிக்கையை நயன் சிங் எடுக்க உள்ளார்.

இருட்டுக்கடை ஸ்தாபனம் சம்பந்தமாக நயன் சிங் சகோதரி கவிதா என்பவருக்கு எந்தவித தொடர்பும் யாரும் வைத்துக் கொள்ள வேண்டாம் என பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அதனை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com