நீதிபதிகள் பணியிட மாற்றம்
நீதிபதிகள் பணியிட மாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
Published on

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தீர்ப்பளிக்கப்படும் என தீர்ப்பு தேதி வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 77 பேரை பணியிட மாற்றம் செய்து உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார்.

அதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில்வேலன் மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு சொத்தாட்சியர் லிங்கேசன் மயிலாடுமுறை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com