கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

News image

மெட்ரோ(கோப்புப்படம்)

Updated On :28 ஏப்ரல் 2025, 3:22 am

DIN

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம் தேதி 2.5 கி.மீ. தூரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடக்கிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதையடுத்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.