மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கவின் உடல் ஒப்படைப்பு! இன்று தகனம்!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இறுதிச் சடங்கு பற்றி...

News image

அமைச்சர் கே.என். நேரு நேரில் அஞ்சலி

Updated On :1 ஆகஸ்ட் 2025, 5:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடல் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக, அமைச்சர் கே.என். நேரு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, கடந்த புதன்கிழமை கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அன்றிரவே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.

சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிய நிலையில், அரசு தரப்பில் உடலைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 5 நாள்களுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

Summary

The body of honor-murder victim Kavin Selvaganesh was handed over to his parents on Friday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.