தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

பிக் பாஸ் கமருதீனுக்கு நம்பிக்கை அளித்த நடிகர் கவின்!

சின்ன திரை நடிகர் கமருதீனுக்கு நடிகர் கவின் நம்பிக்கை அளித்துள்ளது குறித்து...

Actor kavin console bigg boss 9 tamil kamarudin

கமருதீன் / கவின் - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :3 பிப்ரவரி 2026, 5:55 pm IST

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட கமருதீனுக்கு நடிகர் கவின் நம்பிக்கை அளித்துள்ளார்.

ஒரு மோசமான ஒற்றை நாள் நீங்கள் யார் என்பதை தீர்மானித்துவிடாது என்றும், தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் உங்களை மக்களுக்கு நிரூபிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், மகாநதி தொடரின் நாயகன் கமருதீனும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

பிக் பாஸில் விஜே பார்வதியுடன் பழகி வந்த கமருதீன், இதற்காக பலமுறை எச்சரிக்கப்பட்டார். பிக் பாஸில் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் காரில் இருந்து சாண்ட்ராவை தள்ளிவிட்டதற்காகவும் தகாத வார்த்தையால் பேசியதற்காகவும் விஜே பார்வதி - கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

ரெட் கார்டு பெற்றுக்கொண்டு வெளியேறியவர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அவர்களுக்கு போட்டிக்கான தொகையும் கொடுக்கப்படாது எனக் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, பல கனவுகளுடன் வந்த கமருதீன் அவை அனைத்தும் சிதையும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டு வெளியேறிவிட்டதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். சக போட்டியாளர்களும் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.

இதற்கிடையில் நடிகர் கவின், கமருதீனை தொடர்புகொண்டு பேசியுள்ளார். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும், வாழ்க்கையை நேர்மறையாக எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு மோசமான ஒற்றைநாள் நம்மை தீர்மானித்துவிடாது என்றும், தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விப்பதன் மூலம் உங்களை நிரூபிக்க முடியும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

கவினின் அழைப்பை சற்றும் எதிர்பாராத கமருதீன், மிகவும் மகிழ்ச்சியுடன் இதனை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Summary

Actor kavin console bigg boss 9 tamil kamarudin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.