ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்துக் குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

News image
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்- DNS
Updated On :2 ஆகஸ்ட் 2025, 5:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்து 16,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையம் வழியாக 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நீர்வரத்துக் குறைந்திருப்பதால், உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.