
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் மனைவியுடன் சேர்ந்து கூலித் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த ஒருவர் தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காணை ஒன்றியம், ஒட்டன் காடுவெட்டியைச் சேர்ந்த கலியன் மகன் பெருமாள் (58) எனத் தெரிய வந்தது.
விசாரணையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தனக்கு வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு சார்பில் தனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் வழங்கப்பட வில்லை.
இது குறித்து அலுவலர்களிடம் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. சொந்தமாக ரூ.3.80 லட்சம் செய்தும் அலுவலர்கள் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர் என்றார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.