
மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம் நடுத்தெருவில் உள்ள தனியார் திரையரங்கம் எதிரில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர், கோமாக்கி நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தை கடந்த 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கடை வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தை இயக்கியபோது, வாகனத்திலிருந்து புகை வர தொடங்கியது. பின்னர், அதிக புகை வெளியேறி வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு கருவி மூலமும் தண்ணீர் கொண்டும் தீயை அணைக்க முயன்றனர்.
தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாகவே வாகனம் முற்றிலும் எரிந்தழிந்தது.
அவ்வப்போது எங்காவது ஒரு இடத்தில் மின்சார பைக் தீப்பிடிக்கும் சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது, மன்னார்குடியில் இருசக்கர மின் வாகத்தை இயக்கியபோது தீப்பிடித்து எரிந்தழிந்த சம்பவம் அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகி, தற்போது அது சமுக வலைதளங்களில் பரவி வருவதால், மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.