
தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை பறித்துச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், எம்.பி.யிடம் பறிக்கப்பட்ட செயினும் மீட்கப்பட்டதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா அதில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை அவர் நடைபயிற்சி சென்றிருக்கிறார்.
அப்போது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.
இதில் லேசான காயமடைந்த சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர், எம்பியின் செயினை மீட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.