அரசு கல்லூரிகளில் எம்.எட். சேர்க்கை: ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு இன்று(ஆக. 11) முதல் விண்ணப்பிக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஆக. 11) முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணவர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) முதல் ஆக. 20 வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும்.

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் ஆக. 25 அன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை ஆக. 26 முதல் ஆக. 29 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 1 முதல் துவங்கும்.

இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

Summary

Higher Education Minister K.V. Cheliyan has informed that online application registration for M.Ed. student admission in government education colleges will begin from today (Aug. 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com