
வால்பாறையில் கரடியொன்று 8 வயது வடமாநில சிறுவனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கரடி கொன்றது.
சிறுமியின் தாய் கண் முன்னே இந்தச் சம்பவம் நடைபெற்ற நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி அகப்பட்டது. கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் அரங்கேறி உள்ளது.
வால்பாறை நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதியில் தங்கி பணி புரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் 8 வயது மகன் நூர் இஸ்லாம் இன்று(ஆக. 12) தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது, அங்கு வந்த கரடி ஒன்று, சிறுவனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை அறிந்த கதறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த வனத் துறையினர் சிறுவனை தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாக கிடந்தான். உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறையில் அடுத்தடுத்து நடைபெறும் கரடி தாக்குதல்களால் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கரடி தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பாகும்.
இதையும் படிக்க: தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.