
நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் காணப்படுகிறது.
தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட சர்க்காா் மூலை, பாடந்தொரை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து விவசாயிகளின் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்தப் புலியை கூண்டுவைத்து பிடிக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
புலியைப் பிடிக்க தேவர்சோலை, சர்க்காா் மூலை பகுதியில் மூன்று கூண்டுகளை அமைத்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முதுமலையில் இருந்து வந்துள்ள விஜய், வசீம் ஆகிய இரு கும்கி யானைகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வைகை மண்ணில் நடக்கும் மாநாடு வாகை சூடும் வரலாறு! - விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.