அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

அதிமுகவில் இருந்து விலகியது குறித்து மைத்ரேயன் விளக்கம்...
மைத்ரேயன்
மைத்ரேயன்
Published on
Updated on
1 min read

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து மைத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் பேசியதாவது:

”முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கல்வி, சமூதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக இருக்கிறது.

கருணாநிதியின் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார். இதனால், ஸ்டாலினின் சிப்பாயாக திமுகவில் இணைந்துள்ளேன்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்தாண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் ஸ்டாலின்தான் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுவார். வருகின்ற தேர்தல் 2 ஆம் இடத்துக்கானது.

அதிமுக போக்கு சரியாக இல்லை. பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல்திட்டம் என்று அமித் ஷா கூறியுள்ளார். அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒருசிலர் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ளாததால் அதிமுகவில் இருந்து விலகியுள்ளேன்.

திராவிட கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை முடிவு செய்வது அவர்களாகதான் இருப்பார்கள். ஆனால், அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் சுவிட்ச் தில்லியில் இருக்கிறது. தில்லிக்கு அதிமுக தலைமை கட்டுப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள். திமுக ஆட்சி தொடர்வதற்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவார்கள்.” எனத் தெரிவித்தார்.

Summary

Maitreyan has explained why he left the AIADMK and joined the DMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com