
சுதந்திர நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று (ஆக.15) சுதந்திர தினம்கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
"அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், நம் தாய்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம். வாழிய பாரத மணித்திரு நாடு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் வாழ்த்து செய்தியில்,
”79-வது ஆண்டு சுதந்திர தினம் மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம் அமைய வழிவகுக்கும்.
மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
இத்திருநாளில், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.