
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக ஆளுநர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமையில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும், அவரது அழைப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன.
இதனையடுத்து, தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளையும் ஆளுநர் ரவி முன்வைத்தார்.
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாகவும், பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஆளுநரின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள்கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?
அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.