
தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மக்களின் ஆதரவுடன் அமையும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர், திராவிட மாடல், இந்தியாவின் திசைகாட்டி! என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இங்கு அவதூறுகளை அள்ளி இரைக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் மீதும் அக்கறையில்லை; நாட்டின் மீதும் உண்மையான பற்று இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய சிந்தனை கொண்டோரின் மலிவான அரசியலைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 மக்களின் ஆதரவுடன் அமையும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.