கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

ராமதாஸ் தலைமையில் தொடங்கிய பாமக பொதுக்குழு! கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா?

நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பாமக பொதுக்குழுக் கூட்ட மேடையில் மகளுடன் ராமதாஸ்.

Published On :17 ஆகஸ்ட் 2025, 1:51 pm IST

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கவுள்ளது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள் மொழி, பொதுச் செயலர் முரளி சங்கர், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ஆகியோர் கட்சி ரீதியான மோதல்போக்கு காரணமாக தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணி தலைமையில் கடந்த 9 ஆம் தேதி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார், பாமகவில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று(ஆக. 17) நடைபெற்று வரும் பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு மேடையில் ராமதாஸ் இருக்கைக்கு அருகே, அவரின் மகள் காந்திமதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Summary

The PMK State Special General Committee meeting is underway at the Sangamitra Arena in Pattanur, Villupuram district near Puducherry, under the leadership of PMK founder Ramadoss.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.