பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் அன்புமணி மீது சில குற்றச்சாட்டுகளும் முன்வைத்தனர்.
ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் அன்புமணி மீது சில குற்றச்சாட்டுகளும் முன்வைத்தனர்.

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பொதுக்குழுவில் அன்புமணி மீது சில குற்றச்சாட்டுகளையும் கட்சி நிர்வாகிகள் முன்வைத்துப் பேசினர்.

அவர்கள் கூறியதாவது,

  • தைலாபுரத்தில் மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு வரவிடாமல், 100 மாவட்டச் செயலாளர்களைத் தடுத்தது

  • சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறு பரப்பியது

  • பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி, தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது

  • ராமதாஸை சந்திக்க வருவோரிடம் பணம், பதவி தருவதாக ஆசை வார்த்தைகூறி, கடத்திச் செல்வது

  • கட்சியில் ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் சேர்த்தது செல்லாது

  • சமரச பேச்சுவார்த்தையை உதாசீனம்

  • ராமதாஸ் இருக்கையின்கீழ் ஒட்டுக்கேட்பு கருவி

  • அனுமதி பெறாத பொதுக்குழுவில் தனி இருக்கையில் துண்டு

  • அனுமதியை மீறி, `உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற கபட நாடக நடைபயணம்

  • பெயர், புகைப்படம் விவகாரத்தில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவது

  • பாமக தலைமை அலுவலகத்தை நிறுவனர் ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது

  • பசுமைத் தாயகம் அமைப்பைக் கைப்பற்றியது

  • மக்கள் தொலைக்காட்சி அபகரிப்பு

  • ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாகச் சொன்னது

  • ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை என்று கேலி செய்தது

இந்தப் பொதுக்குழுவில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸே தேர்வு செய்யப்பட்டதுடன், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.

அதுமட்டுமின்றி, ராமதாஸை அன்புமணி அவமதித்து விட்டதாக பொதுக்குழுவில் குற்றச்சாட்டுகளும், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை மற்றும் If you're Bad, I'm your Dad என்ற பதாகைகளையும் கட்சித் தொண்டர்கள் ஏந்தியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com