
வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே நேற்று (ஆக.17) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சின்னம் வரும் 19 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.