மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

திட்டங்களை அறிவித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி படம் - அதிமுக
Published on
Updated on
1 min read

திட்டங்களை அறிவித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 18) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,

''யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ? அவர்களுக்கு பதவி தருகிறார் மு.க. ஸ்டாலின். திமுகவில் யார் அதிகம் கப்பம் கட்டுகிறார்களோ அவர்களுக்கே பாராட்டு கிடைக்கும்.

திமுகவில் பல போராட்டங்களில் ஈடுபட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, சமூக நலத் துறை என பல துறைகளில் அதிமுக அரசு விருதுகளைப் பெற்றது.

இன்று, தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை எனப் புகார்கள் வருகின்றன.

கிராமம் முதல் நகரம் வரை நடமாடும் மருத்துவமனைகளை அமைத்தது அதிமுக அரசு.

தமிழகத்தின் கிராமங்களில் 2 ஆயிரம் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டது. இதனை திமுக அரசு ரத்து செய்துவிட்டது.

திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள், அடுத்த ஆண்டு ஆட்சி அமைத்து மீண்டும் தொடங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கடன்கள் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5% இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது அதிமுக.

மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது'' எனப் பேசினார்.

இதையும் படிக்க | ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

Summary

AIadmk edappadi palanisamy in kalasapakkam campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com