
நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"இந்தியாவின் பத்ம விபூசண்! தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்!
அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்!
அண்ணன் ரஜினிகாந்த் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து, அவரை வாழ்த்தி வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.