
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டாா்.
இருப்பினும், இதற்கு மு.க.ஸ்டாலினிடம் இருந்து சாதகமாக பதில் வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஆதரவு அளிக்கக் கோரி பல்வேறு கட்சிகளின் தலைவரிடமும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொலைபேசி வழியாக பேசி வருகிறாா்.
அந்த வகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினையும் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.