தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து...

News image

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்

Updated On :20 ஆகஸ்ட் 2025, 5:13 pm IST

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சன் நெட்வொர்க் சாா்பில் எம்.ஜோதிபாசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சா்ஸ் சார்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இத்திரைப்படத்தைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘கூலி’ திரைப்படத்தை விட கேஜிஎஃப் உள்ளிட்ட பிற திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன், மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன் இன்று(ஆக. 20) விசாரணக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிறோம் என்று முன்னர் தெரிவித்தபோது, அதனை ஏற்றுக் கொண்டு, தற்போது வழக்கு தொடுத்துள்ளதாகவும், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்கவும் கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி , மனுவுக்கு பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 25-க்கு ஒத்திவைத்தார்.

Summary

Regarding the order issued by the court in the case of seeking U/A certificate for coolie movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.