
ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாப்புதுப் பேட்டையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன். கடந்த 14.4.2023 அன்று அதே பகுதியைச் சேர்ந்த திருமால் மகன் பிரவீன்(19) சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததால், இதுதொடர்பாக பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினர். மேலும், இந்த வழக்கு விசாரணையும் கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இறுதியாக போக்ஸோ நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் பிரவீனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இளைஞரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.