தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்னோலின் குறித்து விஜய் பேசியதைப் பற்றி...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்/ மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்/ மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (ஆக.21) நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டை தலைமைத் தாங்கிய அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக-வின் பல முக்கிய நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், விஜய் பேசிய 35 நிமிட உரையில், கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸாரின் துப்பாக்கிச் சுட்டில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்னோலினின் பெயரை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அப்போது, அவர் பேசியதாவது:

“தூத்துக்குடி ஸ்னோலினின் அம்மா, என்னைத் தனது தம்பி என்றும் அவரது மகளுக்கு நான் தாய்மாமன் என்றும் கூறினார். அந்த அக்காவின் குழந்தைக்கு மட்டுமில்லை, நான் என்னை அண்ணனாக, தம்பியாக நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதரிகளின் குழந்தைகளுக்கும் தாய்மாமன்தான்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற, சில நாள்கள் கழித்து நடிகர் விஜய் தூத்துக்குடியிலுள்ள ஸ்னோலினின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தில், ஸ்னோலினின் தாயார் வனிதா இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

Summary

At the 2nd state convention of the TVK, party leader Vijay spoke about the woman killed in the Thoothukudi shooting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com