
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, மத்திய அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா, பாஜக எம்எல்ஏக்கள் எம்.ஆா்.காந்தி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமித் ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பாளையங் கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு வந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் சென்றார். தமிழகத்தில் 7 இடங்களில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. அதன்படி, முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.