ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி என்று நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
Stalin Annachi, what is your promise? Questions Nainar Nagendran!
மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
Published on
Updated on
1 min read

நெல்லை: திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் இன்று பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.

விழாவைத் தொடங்கி வைத்து, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். பிறகு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், வாக்குறுதி கொடுப்பது திமுகவினர் வழக்கம், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அதனை மறப்பதுதான் பழக்கம் என்று கூறினார்.

மீனவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்றீர்களே, பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே, மின் கட்டணத்தைக் குறைப்போம் என்றீர்களே, எரிவாயு சிலிண்டர் விலைக் குறைப்போம் என்றீர்களே ஸ்டாலின் அண்ணாச்சி கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று திமுக அளித்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர். திமுக ஆட்சி குடும்ப ஆட்சி, பாஜக ஆட்சியோ மக்களுக்கான ஆட்சி. 29 காவல்நிலைய மரணங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழக முதல்வரோ சாரி என்று சொல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com