
கடந்த 3 சனிக்கிழமைகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள் இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,
மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் உடல்நலம் சாா்ந்த அனைத்துவிதமான மருத்துவப் பரிசோதனைகளையும், வசிப்பிடம் அருகிலேயே பெறக்கூடிய வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.