உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

கனமழை எதிரொலியாக, சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரி (கோப்புப் படம்)

Published On :

திருவள்ளூர் மற்றும் சென்னை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள புழால் ஏரிக்கு நேற்று 278 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 880 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதுபோல, சோழவரம் ஏரிக்கும் வினாடிக்கு 122 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 450 கன அடி நீரும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரங்களான, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை உள்ளிட்ட ஏரிகளின் நீா்இருப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிலவரப்படி, 7,821 மில்லியன் கன அடியாக இருந்தது. இதேக் காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு நீர் இருப்பு வெறும் 5,262 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து, ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.