தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தொண்டர்கள் பக்குவப்பட்டதைப்போன்று தெரிகிறது, ஆனால், விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்துவிட்டோமே என்று விஜய் தொடர்ந்து வசைபாடி வருவது நல்லதல்ல எனவும் குறிப்பிட்டார்.
சென்னையில் செய்தியாளர்களுடம் பேசிய அவர்,
75 ஆண்டுகள் பழமையானது திமுக. திமுகவில் தொண்டர்கள் பலர் 3 - 4 தலைமுறைகளாக அனுபவம் பெற்று பக்குவப்பட்டுள்ளனர். ஆலமரம் போன்று திமுக தொண்டர்கள் பரவலாகியுள்ளனர்.
ஆனால், மத்திய அமைச்சருக்கு தமிழகத்தின் அரசியல் பற்றிய புரிதல் இல்லை. தமிழகத்தின் கல்வி முறை பற்றி தெரியவில்லை. தமிழ் மண்ணும் அரசியலும் ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் உள்ளவர். அவரை மரியாதை குறைவாகக் குறிப்பிட்டுப் பேசுவது சரியானதா? இதனை விஜய்யும் அவரின் தொண்டர்களும் புரிந்து செயல்பட வேண்டும்.
நம்மை விசிலடிப்பவர்கள் என்று மட்டும் மற்றவர்கள் சொல்லிவிடக் கூடாது என முந்தைய கூட்டத்தில் விஜய் கூறினார். ஆனால், இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் பக்குவமாக நடந்துகொண்டனர். ஆனால், விஜய் இன்னும் பக்குவப்படவில்லை. கட்சி ஆரம்பித்துவிட்டோமே என்பதால், வசை பாடுவது நல்லதல்ல என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.