
நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை என்றும் 4 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மணப்பாறையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 25) மேற்கொண்டார்.
தொண்டர்கள் மத்தியில் திமுக அரசை விமர்சித்து அவர் பேசியதாவது,
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, குடிமராமத்து திட்டம், 24 மணி நேர மும்முனை மின்சாரம் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட லேப்டாப் வழங்கும் திட்டம், திருமண உதவித் திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.
திமுக ஆட்சியில் கடந்த 51 மாதங்களில் மணப்பாறை மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முழு பாதுகாப்பும், சலுகைகளும் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு நீர் முக்கியம் என்பதை உணர்ந்து குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். இத்திட்டத்தால், ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
மின்வெட்டால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்தும் வகையில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.