கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கி கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு நிலவியது.
Wild elephant attacks forest department vehicle in Coimbatore
வனத் துறையின் வாகனத்தை தாக்கும் காட்டு யானை.
Published on
Updated on
1 min read

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கி கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு நிலவியது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வந்த காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு விலை நிலங்களை சேதப்படுத்தியது.

தகவல் அறிந்து வந்த போளுவாம்பட்டி வனத் துறையினர் காட்டு யானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் தேவராயபுரம் மகாலட்சுமி கோயிலுக்கு செல்லும் ஒத்தையடி பாதை வழியாக ஜீப்பில் காட்டு யானையை விரட்டிக் கொண்டு சென்று உள்ளனர். ஒரு கட்டத்தில் காட்டு யானை நின்று வனத் துறையின் வாகனத்தை பார்த்து ஆவேசமாக ஓடி வந்து இடித்து தள்ளியது.

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

அதில் வண்டியின் முன் கண்ணாடி உடைந்து சிதைந்தது. சுதாகரித்துக் கொண்ட வனத் துறையினர் வாகனத்தை பின்னே எடுத்துச் சென்று உயிர் தப்பினர்.

காட்டு யானை விரட்டுச் சென்ற வனத் துறையினர் வாகனத்தை யானை ஆக்ரோஷமாக தாக்கும் விடியோ அப்பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Summary

There was a stir in Coimbatore after a lone wild elephant furiously attacked a forest department vehicle.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com