அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானதைப் பற்றி...
அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான்.
அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான்.(படம் | DPS)
Published on
Updated on
1 min read

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக.27) காலை காலமானார். அவருக்கு வயது 79.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக பிறந்தவர் கலிலூர் ரகுமான். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய திமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார் கலிலூர் ரகுமான். அந்தத் தேர்தலில் 45,960 வாக்குகள் (45.6 சதவீத வாக்குகள்) பெற்று வெற்றி பெற்றார்.

இவருக்கு யூனஸ் மற்றும் இலியாஸ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இவரது உடல் புதன்கிழமை காலை பள்ளப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Summary

Former Aravakurichi MLA Kalilur Rahman passes away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com