
மகாராஷ்டிர மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு பணியாளர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு பரிசீலனை செய்து வருகிறது.
ஒரு வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்ற நடைமுறைதான் தற்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2017-ல் திருத்தம் மேற்கொள்ள அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அங்குள்ள கடைகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு தற்போதுள்ள 9 மணி வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரத்திற்கு மேலாக கண்டிப்பாக வேலை வாங்கக்கூடாது எனவும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக 12 மணி நேர வேலை என்பது நீக்கப்படுகிறது.
அதேபோல வேலை நேரம் தவிர கூடுதல் வேலை நேரத்தின் அளவு 3 மாதங்களுக்கு 125 மணி நேரத்தில் இருந்து 144 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூடுதலாக 10.30 மணி நேரம் வேலை செய்துகொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் குறித்து மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக தெலங்கானாவில் ஒரு நாள் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. கர்நாடகத்திலும் 10 - 12 மணி வேலை நேரமாக மாற்ற மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.
வேலை நேரம் அதிகரிக்கப்படுவது தொழிலாளர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.