
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.
தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அவர் அறிவித்தார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் அல்ல, அரசியல் வற்புறுத்தல் மற்றும் மொழித் திணிப்பு இல்லாமல், கல்விக்கு சமமான உரிமையை பெற வேண்டிய தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கான போராட்டமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.