
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்குள்ள ராகுல் காந்தியின் புகைப்படங்களில் கருப்பு வண்ணப்பூச்சு பூசியதோடு பதாகைகள் மற்றும் கொடிகளை சிலர் கிழித்ததாகக் கூறப்படுகிறது.
அதோடு அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அலுவலகத்திற்கு வெளியே டயர்களை எரித்ததிலும், வளாகத்திற்குள் நுழைய முயன்றதிலும் மற்ற ஆதரவாளர்களுடன் சேர்ந்து மூவர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தோஷ் ராஜ்வா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடர்கிறோம், ராகேஷ் சிங் மற்றும் பிறரைக் கைது செய்ய முயற்சி செய்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், முக்கிய குற்றவாளியான உள்ளூர் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பிகாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மோசமான வார்த்தைகளால் திட்டிய விடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இதனைக் கண்டித்து பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராகேஷ் சிங் தலைமையில், போராட்டக்காரர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தகவல் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.