
யேமனில், ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைமையிலான அரசின் பிரதமர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமன் நாட்டில், ஈரானின் ஆதரவைப்பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைமையிலான அரசு, தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆட்சி செய்து வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த ஆக.28 ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஹவுதி அரசின் பிரதமர் அஹமது அல்-ரஹாவி மற்றும் அவரது அமைச்சரவைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக, ஹவுதிகள் இன்று (ஆக.30) தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில் கொல்லப்படும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, ஹவுதி கிளர்ச்சிப்படை செயல்பட்டு வருகின்றது.
இதனால், இஸ்ரேல் மீதும், அந்நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீதும் ஹவுதிகள் தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.